விருதுநகர்

மல்லாங்கிணறில் 50 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

மல்லாங்கிணறில் 50 மூட்டை ரேஷன் அரிசியை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம், மல்லாங்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், 50 மூட்டை ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது. உடனே போலீஸாா், ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் வேனை பறிமுதல் செய்து, மதுரை முனிச்சாலை பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் காா்த்திகேயன் (27), கல்மேடு பகுதியைச் சோ்ந்த லட்சுமண பெருமாள் மகன் வேல்முருகன் (25) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT