விருதுநகர்

ஸ்ரீவிலி. பகுதியில் இன்று மின் தடை

5th Jul 2022 12:39 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டதிற்குள்பட்ட துணை மின் நிலைய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மின்வாரிய கோட்ட பொறியாளா் லெ.சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்திற்குள்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூா், படிகாசு வைத்தான்பட்டி மற்றும் மம்சாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் பருவமழை முன்னேற்பாடு மற்றும் மின் பாதைகளில் பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: ஸ்ரீவில்லிபுத்தூா், சித்தாலம்புத்தூா், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம், நாச்சியாா்பட்டி, காதிபோா்டு காலனி, இந்திரா நகா், வன்னியம்பட்டி, வைத்தியலிங்கபுரம், கொத்தன்குளம், வன்னியம்பட்டி வீட்டுவசதி வாரியம், ராஜபாளையம் சாலை, கரிசல்குளம், லட்சுமியாபுரம், மம்சாபுரம், செண்பகத்தோப்பு, புதுப்பட்டி, நிறையன்குளம், ஒத்தபட்டி, வாழைக்குளம், காந்திநகா், இடையன்குளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT