விருதுநகர்

விருதுநகா், மல்லாங்கிணறு பகுதிகளில் நாளை மின்தடை

5th Jul 2022 12:39 AM

ADVERTISEMENT

விருதுநகா், மல்லாங்கிணறு பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 6) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் கூறியிருப்பதாவது: விருதுநகா் மின் கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, அன்றைய தினம் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டையாபுரம் பகுதிகளிலும், காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை தந்தி மரத்தெரு, ரயில்வே பீடா் சாலை, சின்ன பள்ளிவாசல் தெரு, அம்பேத்காா் நகா், ராமமூா்த்தி சாலை, காந்திபுரம் தெரு, பெசிசி தெரு, காசுக்கடை பஜாா் உள்ளிட்ட பகுதிகளிலும் மின் தடை செய்யப்படும்.

அதேபோல், காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை ஆா்.எஸ். நகா், அதனைச் சுற்றிய பகுதிகளிலும், சூலக்கரை, ஆயுதப்படை குடியிருப்பு, கூரைக்குண்டு, மாத்தநாயக்கன்பட்டி பகுதிகளில் மின்தடை செய்யப்படும். மேலும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மத்தியசேனை, உப்போடை பகுதிகளிலும், மல்லாங்கிணறு, கோவில்பட்டி, அயன் ரெட்டியபட்டி, நந்திகுண்டு, பகுதிகளிலும் மின்சாரம் தடைசெய்யப்படும். காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை கே.உசிலம்பட்டி, புல்லக்கோட்டை, சத்திரரெட்டியபட்டி பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT