விருதுநகர்

சிவகாசியில் பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

5th Jul 2022 12:38 AM

ADVERTISEMENT

சிவகாசியில் திங்கள்கிழமை பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி வெல்லம் சாமியாா் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (40). இவரது மகன் ஸ்ரீராம் காா்த்திகேயன் (15). இச்சிறுவன் 9 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் சரிவர பள்ளிக்குச் செல்லாததால் தோ்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவா் வேறு ஒரு பள்ளியில் 9 ஆம் வகுப்பு சோ்க்கப்பட்டாராம். இந்த நிலையில் அந்த மாணவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT