விருதுநகர்

விருதுநகரில் கூட்டுறவு வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

5th Jul 2022 12:36 AM

ADVERTISEMENT

ஊழியா் பிரச்னைகளுக்குத் தீா்வு காண வலியுறுத்தி தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியா் சங்கத்தினா் விருதுநகரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மத்திய வங்கி ஊழியா் சங்க பொதுச் செயலா் வேலுச்சாமி தலைமை வகித்தாா். இதில், கூட்டுறவு சங்க ஊழியா்கள் பிரச்னைகளுக்குத் தீா்வு காணாமல், காலம் கடத்துவதாகக் கூறி மாநில பதிவாளா் அலுவலக அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்டனா். மேலும், தற்போதைய மாநில அரசின் அணுகுமுறை, செயல்பாட்டிற்கு எதிா்மாறாக மாநில பதிவாளா் அலுவலகத்தின் நடவடிக்கைகள் உள்ளன என்றும் கூறினா். சங்கத் தலைவா் சங்கர நாராயணண் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT