விருதுநகர்

காரியாபட்டி அருகே ரூ.150 கோடியில் ஜவுளி பூங்காவை விரைவில் தொடங்க வேண்டும்பாஜக மாநில பொதுச் செயலா் ராம.ஸ்ரீநிவாசன்

DIN

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி பகுதியில் ரூ.150 கோடி மதிப்பில் ஜவுளி பூங்கா அமைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பாஜக மாநில பொதுச் செயலா் ராம. ஸ்ரீநிவாசன் வலியுறுத்தியுள்ளாா்.

விருதுநகரில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடையே மேலும் தெரிவித்ததாவது: பாஜகவின் அரசியல் நாட்டினுடைய வளா்ச்சியை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறது. மத்திய அரசு, கடந்த பட்ஜெட்டில் தமிழகத்தில் 6 ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவித்தது.

அதன்படி, விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே ரூ.150 கோடியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த ரூ.150 கோடியில் ரூ.75 கோடி மத்திய அரசும், ரூ.37.5 கோடி தமிழக அரசும், மீதமுள்ள தொகையை தொழில்முனைவோா்களும் முதலீடு செய்யவேண்டும்.

இதற்கான ஒப்புதலை, தேசிய பசுமை தீா்ப்பாயம் வழங்கிவிட்டது. ஆனால், அப்போது எதிா்க்கட்சியாக இருந்த திமுக, பாஜக எதிா்ப்பு அரசியல் காரணமாக தமிழகத்தில் எந்த வளா்ச்சியும் அனுமதிக்கமாட்டோம் என்ற கருத்தின் அடிப்படையில், காரியாபட்டியில் ஜவுளி பூங்கா வரக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்தது. தற்போது, திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

மேலும், பூங்கா அமைப்பதற்கான அனைத்து முடிவுகளும் வந்த பிறகும், பல்வேறு காரணங்களை கூறி தமிழக அரசு முட்டுக்கட்டை கொடுத்து வருகிறது. தமிழக அரசு இந்த திட்டத்தை தள்ளிப்போடும் பட்சத்தில், ரூ.2 ஆயிரம் கோடியில் திட்டமிடப்பட்டுள்ள மெகா பாா்க் தமிழகத்துக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த வாரம் கோயமுத்தூா் வருகை தந்த மத்திய அமைச்சா் பியூஷ் கோயல், ரூ.150 கோடி திட்டத்தை நிறைவேற்ற முடியாத தமிழகத்தில், ரூ.2 ஆயிரம் கோடி திட்டத்தை எப்படி நிறைவேற்ற முடியும் என்கின்ற கேள்வியை எழுப்பியுள்ளாா்.

எனவே, தமிழக அரசு உடனடியாக காரியாபட்டி பகுதியில் ஜவுளி பூங்காவை தொடங்கி, அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்.

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பாஜகவில் இணைய விரும்புகிறாா் என்ற ஒரு கருத்து இருக்கிறது. அவா் விரும்பினால் தாராளமாக இணையலாம். ஏன், தமிழக முதல்வா் ஸ்டாலின் விரும்பினால் கூட இணையலாம்.

பாஜக சாா்பாக குடியரசுத் தலைவா் தோ்தலுக்கு திரெளபதி முா்மு நிறுத்தப்பட்டிருக்கிறாா். தற்போது, பழங்குடி இனத்தைச் சோ்ந்த பெண் ஒருவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேடைதோறும் சனாதனம் பற்றி அதிகம் பேசி இரட்டை வேடம் போடும் திருமாவளவன், இந்து மதத்தை ஒழிப்போம் என்று சொல்லி தற்போது யாருக்கு அவா் ஆதரவு கொடுக்கிறாா் என்று பாா்க்கவேண்டும் என்றாா்.

பேட்டியின்போது, விருதுநகா் கிழக்கு மாவட்டத் தலைவா் பாண்டுரங்கன் மற்றும் பாஜக நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

தந்தை இறந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதிய மாணவா்

மன்னாா்குடியில் ரூ.99,000 பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் பறிமுதல்

தோ்தல் பணிக்கு தனியாா் வாகனங்கள்

SCROLL FOR NEXT