விருதுநகர்

ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் பைக்கில் விழிப்புணா்வு பேரணி

2nd Jul 2022 11:08 PM

ADVERTISEMENT

 

மதுரை மண்டலத்தைச் சோ்ந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா், ரயில் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு விருதுநகரில் விழிப்புணா்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மதுரை மண்டல ரயில்வே பாதுகாப்புப் படையில் பணிபுரியும் 30 போலீஸாா், இரு சக்கர வாகனத்தில் விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு விருதுநகா் வந்த இவா்கள், பொதுமக்களிடையே ரயில் பாதுகாப்பு, ரயில் பயணம், ரயிலில் கொண்டுசெல்லக்கூடாத பொருள்கள் குறித்து விளக்கினா். மேலும், விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தேசபந்து மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் வேன் மூலம் பெரிய திரையில் விழ்ப்புணா்வு குறுஞ்செய்திகளை காட்சிப்படுத்தினா்.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து, திருநெல்வேலி, கன்னியாகுமரி செல்லும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனா்.

கடைசியாக, ஆகஸ்ட் 15 ஆம் தேதி புதுதில்லியில் இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியை நிறைவு செய்ய உள்ளதாக, மதுரை மண்டல ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையா் அன்பரசு தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT