விருதுநகர்

சாத்தூரில் ஆனி தேரோட்டம்: ஆலோசனைக் கூட்டம்

2nd Jul 2022 11:07 PM

ADVERTISEMENT

 

ஆனி தேரோட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் 500ஆண்டுகள் பழைமைவாய்ந்த வெங்கடாசலபதி கோயிலின் ஆனி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இத்திருவிழா, கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக நடைபெறவில்லை.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆனி தேரோட்டம் இந்தாண்டு ஜூலை 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம், சாத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இக்கூட்டத்துக்கு, சாத்தூா் வட்டாட்சியா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். சாத்தூா் காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் நாகராஜன் முன்னிலை வகித்தாா். சாத்தூா் சடையம்பட்டி, அணைக்கரைப்பட்டி, படந்தால் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஊா் முக்கிய தலைவா்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

இதில், ஆனி தேரோட்டம் குறித்த முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தேரோட்டத்தின்போது, நடைமுறைப்படுத்த வேண்டிய செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு, அனைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT