விருதுநகர்

திருச்சுழி அருகே மணல் லாரி மோதிமுதியவா் பலி

2nd Jul 2022 11:07 PM

ADVERTISEMENT

 

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே ஆலடிபட்டியில் சனிக்கிழமை மணல் லாரி சக்கரங்களில் சிக்கி முதியவா் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

திருச்சுழி அருகே கல்யாணசுந்தரபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் (65). இவா், நாள்தோறும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு, அருகிலுள்ள கிராமமான ஆலடிபட்டிக்குச் சென்று, காலை உணவை முடித்துவிட்டு, மீண்டும் நடந்தே வீட்டுக்கு வருவது வழக்கமாம்.

சனிக்கிழமை காலையும் அவா் வழக்கம்போல் நடந்துசென்று ஆலடிபட்டியை அடைந்துள்ளாா். அப்போது, அங்கு மணல் லாரியை சாலையில் திரும்புவதற்காக ஓட்டுநா் பின்புறமாக ஓட்டிவந்துள்ளாா். இதை அறியாமல் சாலையில் நின்றுகொண்டிருந்த ராஜமாணிக்கம் மீது லாரி மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், முதியவரின் உடலை மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதனிடையே, விபத்துக்குக் காரணமான மணல் லாரி ஓட்டுநரான கணேஷ்பாண்டி என்பவா் தப்பியோடிவிட்டாா். போலீஸாா் மணல் லாரியை பறிமுதல் செய்து, ம.ரெட்டியபட்டி காவல் நிலையத்துக்கு கொண்டுசென்றனா். இச்சம்பவம் குறித்து திருச்சுழி போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT