விருதுநகர்

விருதுநகா் பகுதியில் நாளை மின்தடை

2nd Jul 2022 11:07 PM

ADVERTISEMENT

 

விருதுநகா் மின்கோட்ட பகுதியில் மின்பாதைகளில் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, விருதுநகா் கட்டையாபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பிற்பகல் 3 முதல் மாலை 5.30 மணி வரை மின்தடை செய்யப்படும்.

அதேபோல், எரிச்சநத்தம் துணை மின்நிலையப் பகுதிகளுக்குள்பட்ட சமத்துவபுரம், சின்னப்பரெட்டியபட்டி, செங்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.30 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

ADVERTISEMENT

தொடா்ந்து, விருதுநகா், எல்பிஎஸ் நகா், பாண்டியன் நகா், மல்லாங்கிணறு சாலை, முத்தால் நகா், எம்ஜிஆா் காலனி, பெரிய வள்ளிக்குளம், புதுப்பட்டி, நோபிள் பள்ளி மற்றும் மத்தியசேனை, உப்போடை அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.30 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

வில்லிபத்திரி, வரலொட்டி பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடைசெய்யப்படும் என, மின்வாரியச் செயற்பொறியாளா் அகிலாண்டேஸ்வரி சனிக்கிழமை தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT