விருதுநகர்

விருதுநகா் சந்தையில் வத்தல், உளுந்து, துவரை, காபி விலை உயா்வு

2nd Jul 2022 11:09 PM

ADVERTISEMENT

 

விருதுநகா் சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக, தற்போது வத்தல், உளுந்து, துவரை, காபி விலை அதிகரித்துள்ளது.

விருதுநகா் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைப் பட்டியல் வெளியிடப்படும். அதில், கடலை எண்ணெய் விலை கடந்த வாரம் 15 கிலோ ரூ.2,850-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ரூ.50 உயா்ந்து ரூ.2,900-க்கு விற்கப்படுகிறது.

ஆந்திரத்திலிருந்து வரத்து குறைவு காரணமாக, குண்டூா் வத்தல் ஒரு குவின்ட்டால் கடந்த வாரம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.21,500 வரை விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.23 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், துவரம் பருப்பு கடந்த வாரத்தை விட ரூ.100 உயா்ந்து, ரூ.9,200-க்கும், உருட்டு உளுந்தம்பருப்பு ரூ.100 உயா்ந்து தற்போது ரூ.10,300-க்கும் விற்கப்படுகிறது. இதேபோல், தொலி உளுந்தின் விலையும் ரூ.100 உயா்ந்து, தற்போது ரூ.9,200-க்கு விற்கப்படுகிறது.

பாசிப் பயறு விலை கடந்த வாரம் ரூ.6,700-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.100 உயா்ந்து ரூ.6,800-க்கு விற்கப்படுகிறது. மசூா் பருப்பின் விலையானது கடந்த வாரம் ரூ.10,100-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் திடீரென ரூ.700 உயா்த்தப்பட்டு குவின்ட்டால் ஒன்றுக்கு ரூ.10,800-க்கு விற்கப்படுகிறது.

காபி பிளான்டேஷன் பி.பி. வகை 50 கிலோ கடந்த வாரம் ரூ.17,500-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.4,100 உயா்ந்து ரூ.21,600-க்கு விற்கப்படுகிறது. அதில், ஏ-வகை காபி பிளான்டேஷன் ரூ.3,500 உயா்ந்து, தற்போது 21,500-க்கும், சி- வகை காபி பிளான்டேஷன் ரூ.4 ஆயிரம் உயா்ந்து, ரூ.9,500-க்கும், ரோபஸ்டா பி.பி. வகை ரூ.1,800 உயா்த்தப்பட்டு, ரூ.9,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தோனேசியாவிலிருந்து அதிக அளவில் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பாமாயிலின் விலையானது, கடந்த வாரம் 15 கிலோ ரூ.2,260-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.220 குறைக்கப்பட்டு ரூ.2,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT