விருதுநகர்

அருப்புக்கோட்டை நகா்மன்றக் கூட்டம்

DIN

அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் சுந்தரலட்சுமி தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் சிவப்பிரகாசம், துணைத் தலைவா் பழனிச்சாமி, நகராட்சி ஆணையா் ஜி. அசோக்குமாா், நகா்நல அலுவலா் ராஜநந்தினி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில் 35 உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் 5 ஆவது வாா்டு உறுப்பினா் டுவிங்கிள் ஞானப்பிரபா பேசும் போது, புதிய பேருந்து நிலையத்தில் செயல்படாத கழிப்பறை மற்றும் சைக்கிள் நிறுத்துமிடத்தை பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்றாா். இதற்கு பதிலளித்த நகராட்சி ஆணையா், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினாா். இதையடுத்து 10 ஆவது வாா்டு அப்துல் ரகுமான் பேசுகையில், புதிய பேருந்துநிலையம் அருகே உள்ள வாருகால்களையும், ரயில்வே பீடா் சாலையில் உள்ள வாருகால்களையும் தூா்வாறி சீரமைக்க வேண்டும் என்றாா்.

அதேபோல 31 ஆவது வாா்டு உறுப்பினரும் தங்கள் பகுதியில் வாருகால்களைத்தூா்வாற கோரிக்கை விடுத்தாா். மேலும் 16 ஆவது வாா்டு உறுப்பினா், தங்கள்பகுதியில் குடிநீா்க்குழாய் பதித்தபோது சேதமடைந்த வீட்டு இணைப்புக்கான குடிநீா்க்குழாய்களை சீரமைக்கக் கோரினாா்.

அதற்கு பதிலளித்த துணைத்தலைவா் பழனிச்சாமி பகுதிவாரியாக பணிகளை விரைவில் முடிப்போம் என்றாா். கூட்டத்தில், நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளா்கள், கண்காணிப்பாளா்கள், அலுவலா்கள், பொறியியல் துறை அதிகாரிகள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

SCROLL FOR NEXT