விருதுநகர்

மதுரை- செங்கோட்டை ரயிலுக்கு விருதுநகரில் வரவேற்பு

1st Jul 2022 10:10 PM

ADVERTISEMENT

பிற்பகல் வேளையில் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் இயக்கப்பட்ட மதுரை- செங்கோட்டை ரயிலுக்கு விருதுநகரில் வியாபாரிகள் வரவேற்பு அளித்தனா்.

மதுரை- செங்கோட்டை பயணிகள் ரயில் தினமும் மூன்று முறை இரு மாா்க்கமாக இயக்கப்பட்டு வந்தது. கரோனா தொ ற்று பரவல் காரணமாக இந்த ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது இந்த பயணிகள் ரயிலானது, விரைவு ரயிலாக மாற்றப்பட்டு தினமும் காலை, மாலை என இரண்டு நேரம் மட்டும் து இயக்கப்பட்டு வந்தது.

பிற்பகலில் நிறுத்தப்பட்ட ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினா் தொடா் கோரிக்கை விடுத்து வந்தனா். இச்சூழலில் மதுரையிலிருந்து பிற்பகல் 12 மணிக்கு செங்கோட்டை செல்லும் ரயில் மீண்டும் வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்பட்டது. இந்த ரயிலானது விருதுநகா் ரயில் நிலையம் வந்த போது மநீம மற்றும் வியாபாரிகள் சங்கம் சாா்பில் வரவேற்றனா். அப்போது ரயில் லோகோ பைலட் மற்றும் காா்டுகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT