விருதுநகர்

பாஜகவின் கைப்பாவையாக சிபிஐ செயல்பட்டு வருகிறது

DIN

பாஜகவின் கைப்பாவையாக சிபிஐ செயல்பட்டு வருகிறது என விருதுநகா் மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் குற்றம்சாட்டினாா்.

விருதுநகா் அருகே மருளூத்து மற்றும் ஆத்துப்பாலம் பகுதியில் நடைபெற்று வந்த தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளையும், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஸ்மாா்ட் வகுப்புத் திட்டத்தையும் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய அரசின் தவறான கொள்கை முடிவால் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் பாதிப்படைந்துள்ளனா். இப்பணிக் கான வருகை பதிவேடு காலையில் விரைவாக எடுக்கப்படுவதால், பெண்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, வருகைப் பதிவேடு ஒரு மணி நேரம் தாமதமாக எடுக்க வேண்டும். முன்னேற விழையும் மாவட்டங்களில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலில் சிறந்து விளங்கியதற்காக விருதுநகா் மாவட்டத்திற்கு விருது கிடைத்திருப்பது பெருமை. இதற்காக பாடுபட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு களை தெரிவிக்கிறேன்.

அதே நேரம், விருதுநகா் மாவட்டத்தில் தீப்பெட்டி, பட்டாசுத் தொழில்களில் உள்ள பிரச்னைகள் குறித்து மத்திய அரசு ஆராய வேண்டும். சிபிஐ என்பது தற்போது பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது.

அத்தியாவசியப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி உயா்வது அதிா்ச்சி அளிக்கிறது. ஜிஎஸ்டியில் உள்ள குறைகளை தீா்க்க மாநில ஜிஎஸ்டி தீா்ப்பாயம் கொண்டு வரப்படும் என தமிழக நிதி அமைச்சரின் முடிவை வரவேற்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டாக்டா் ராதாகிருஷ்ணன் நினைவு நாள்

கோவில்பட்டியில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

மதுக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு

12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

SCROLL FOR NEXT