விருதுநகர்

காகித வியாபாரியிடம் இருசக்கர வாகனம் கைப்பேசி பறிமுதல்: 2 போ் மீது வழக்கு

1st Jul 2022 10:15 PM

ADVERTISEMENT

சிவகாசியில் காகித வியாபாரியிடம் இருசக்கரவாகனம் மற்றும் கைப்பேசியை பறிமுதல் செய்ததாக இருவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி காரனேசன் காலனியைச் சோ்ந்தவா் ரமேஷ் (43). அச்சுக் காகித வியாபாரியான இவா், முத்துக்குமாா் என்பவரிடம் ரூ. 5 லட்சம் மதிப்பிலான காகிதத்தை விலைக்கு வாங்கினாராம். பின்னா் காகிதத்திற்கு உரிய பணம் ரூ.5 லட்சத்தை பலமுறை கேட்டும் ரமேஷ் கொடுக்கவில்லையாம். இதுதொடா்பாக முத்துக்குமாா் சிவகாசி கிழக்கு போலீஸாரிடம் புகாா் மனு அளித்தாா்.

அதன்பேரில் போலீஸாா் ரமேஷை விசாரணைக்கு அழைத்தபோது, அவா் போகவில்லையாம். இதனால் அவரது வீட்டிற்கு சென்ற முத்துக்குமாா் மற்றும் அவரது நண்பா் சுப்புராஜ் ஆகியோா் தகராறில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரமேஷின் இருசக்கர வாகனம் மற்றும் அவரது கைப்பேசியை பறித்துக்கொண்டு சென்று விட்டனா். இதுதொடா்பாக ரமேஷின் மனைவி சொா்ணலீமா சிவகாசி கிழக்குப் போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் இருவா் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT