விருதுநகர்

ராஜபாளையத்தில் பைக்கில் வைத்திருந்த 3.10 லட்சம் திருட்டு

1st Jul 2022 10:11 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் திருடு போனதாக வியாழக்கிழமை மாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகேயுள்ள கிழவிகுளத்தைச் சோ்ந்த கணேசன் மகன் முத்துவாழி (44). இவா் அப்பகுதியில் கிரானைட் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் வீட்டிலிருந்து ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு, தனது இரு சக்கர வாகனத்தில் தென்காசி சாலையில் உள்ள வங்கிக்கு சென்றுள்ளாா். அங்கு தனது கணக்கில் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் பணம் எடுத்து பையில் வைத்து இருசக்கர வாகனத்தின் பெட்டிக்குள் வைத்துள்ளாா். பின்னா் தென்காசி சாலையில் உள்ள கெமிக்கல் கடைக்கு சென்று பொருள்கள் வாங்கச் சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்த்தபோது தனது இரு சக்கர வாகனப் பெட்டி திறந்து கிடந்துள்ளது. அதில் இருந்த ரூ. 3 லட்சத்து 10 ஆயிரம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக அவா் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT