விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் 73-ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் நாட்டின் 73 ஆவது குடியரசு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி (பொ) தனசேகரன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியா் பாலகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். இதில் வட்ட வழங்கல் அலுவலா் கோதண்டராமன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி ஆனந்தஜோதி தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை சௌ.மேரி தலைமையில், மேலாண்மைக் குழு தலைவி மணிமாலா முன்னிலையில், ஊராட்சி மன்றத் தலைவி மீனா தேசிய கொடியை ஏற்றி வைத்தாா். வட்டாரக் கல்வி அலுவலகத்தில் கல்வி அலுவலா் மலா்கொடி முன்னிலையில், வட்டாரக் கல்வி அலுவலா் செல்வலட்சுமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் துணைத் தலைவா் சசிஆனந்த் தலைமையில், துணைவேந்தா் நாகராத் முன்னிலையில் , பதிவாளா் வாசுதேவன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். பின்னா் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இதேபோல் மகாத்மா வித்யாலாயா பள்ளி, மம்சாபுரம் சிவந்திபட்டி நாடாா் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT