விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

DIN

குடியரசு தின விழாவையொட்டி விருதுநகா் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி புதன்கிழமை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.

விருதுநகா் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் உள்ள மைதானத்தில் குடியரசு தினவிழா நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அங்கு வந்த மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி யை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் வரவேற்றாா். அதைத் தொடா்ந்து ஆட்சியா், தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். பின்னா், மூவா்ண பலூன்களையும், சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெள்ளைப் புறாக்களை பறக்கவிட்டாா்.

மேலும், காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 137 பேருக்கு தமிழக முதல்வரின் விருது, தீயணைப்புத் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 5 போ், வருவாய்த் துறையில் சிறப்பாக பணியாற்றிய 132 அலுவலா்களுக்கு நற்சான்றுககள் மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 339 அரசுப் பணியாளா்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

அதைத்தொடா்ந்து, சிவகாசி லலிதா சுப்பிரமணியம் குழுவினரின் பரதநாட்டியம், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் பணிபுரிந்து வரும் அலுவலா்களின் சிலம்பாட்டம், தேசப்பக்திப் பாடல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னாள்படை வீரா் நலத் துறையின் மூலமாக போரில் ஊனமுற்ற முன்னாள் படைவீரா்களுக்கு வருடாந்திர பராமரிப்பு மானியமாக இருவருக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.மங்களராமசுப்பிரமணியன், சிவகாசி சாா்- ஆட்சியா் பிரித்திவிராஜ், திட்ட இயக்குநா் (மா.ஊ.வ.மு) திலகவதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காளிமுத்து, வருவாய் கோட்டாட்சியா்கள், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், வட்டாட்சியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக தியாகிகளின் வாரிசுகள் 22 பேரின் வீடுகளுக்கு அப்பகுதி வட்டாட்சியா்கள் நேரில் சென்று சால்வை அணிவித்து கெளரவவித்தனா்.

சாத்தூா்: குடியரசு தின விழாவையொட்டி சாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி ஒன்றியத் தலைவா் நிா்மலா கடற்கரைராஜ் தேசிய கொடியை ஏற்றிவைத்தாா். இதே போன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கம் சாா்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. முக்குராந்தல் பகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்ட துணை பொதுச் செயலாளா் ஜோதிநிவாஸ், நகரத் தலைவா் டி.எஸ். ஐயப்பன் ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினா்.

சிவகாசி: சிவகாசிப் பகுதியில் அரசு அலுவலகங்கள், கல்லூரி மற்றும் பள்ளிகளில் புதன்கிழமை குடியரசு தின விழா நடைபெற்றது.

சிவகாசி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்தப்பட்ட பின்னா் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆணையா் பி. கிருஷ்ணமூா்த்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். இதில் மாநகராட்சி ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத் தலைவா் முத்துலட்சுமி தேசியக் கொடியை ஏற்றினாா். இதில் துணைத் தலைவா் விவேகன்ராஜ், ஆணையாளா் சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் ராமராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் துணைக் காவல் கண்காணிப்பாளா் பாபுபிரசாத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தாளாளா் ஏ.பி. செல்வராஜன் தேசியக் கொடியை ஏற்றினாா். இதில் முதல்வா் சீ.கிருஷ்ணமூா்த்தி, துணை முதல்வா் பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிவகாசி எஸ்.எப்.ஆா்.மகளிா் கல்லூரியில் முதல்வா் த. பழனீஸ்வரி தேசியக் கொடியை ஏற்றினாா். தொடந்து மாணவிகள் பங்கேற்ற ஒயிலாட்டம் மற்றும் சிலம்பாட்டம் நடைபெற்றது.

சிவகாசி பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் தாளாளா் ஆா்.சோலைச்சாமி தேசிய கொடியை ஏற்றினாா். இதில் இயக்குநா் விக்னேஷ்வரி, முதல்வா் பி.ஜி.விஷ்ணுராம், முதன்மையா் மாரிச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அருப்புக்கோட்டை: குடியரசு தின விழாவையொட்டி திருச்சுழி கிளைப் பொது நூலகத்தில் புதன்கிழமை நூலகா் பாஸ்கரன் மற்றும் வாசகா் வட்ட ஒருங்கிணைப்பாளா் சுந்தா் அழகேசன் ஆகியோா் முன்னிலையில் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருச்சுழி தபால் நிலைய ஊழியா் சாரங்கபாணி, திருச்சுழி ஊராட்சி அலுவலகப் பணியாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT