விருதுநகர்

சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

27th Jan 2022 09:33 AM

ADVERTISEMENT

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே மழலையா் மற்றும் தொடக்கப்பள்ளியில் சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு ஹிந்துஸ்தான் சாரண, சாரணிய இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாநில இணை ஆணையாளா் நவீன் பிரசாந்த் மற்றும் அருப்புக்கோட்டை நாடாா்கள் உறவின்முறைத் தலைவா் எம். சுதாகா் ஆகியோா் தலைமை வகித்தனா். பள்ளியின் செயலாளா் சி. சுரேஷ், தலைவா் கே. மயில்ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதையடுத்து பள்ளி வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு சுபாஷ் சந்திரபோஸின் 125 ஆவது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில் பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயஸ்ரீ, மாவட்ட சாரண இயக்கப் பொறுப்பாளா்கள் இளவழகன், சுதாலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT