விருதுநகர்

சிவகாசிப் பகுதியில் குடியரசு தினவிழா

27th Jan 2022 09:33 AM

ADVERTISEMENT

சிவகாசிப் பகுதியில் அரசு அலுவலகங்கள், கல்லூரி மற்றும் பள்ளிகளில் புதன்கிழமை 73 வது குடியரசு தினவிழா நடைபெற்றது.

சிவகாசி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்தப்பட்ட பின்னா் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆணையாளா் பி.கிருஷ்ணமூா்த்தி தேசிய கொடியை ஏற்றினாா். இதில் மாநகராட்சி ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத்தலைவா் முத்துலட்சுமி தேசிய கொடியை ஏற்றினாா். இதில் துணைத்தலைவா் விவேகன்ராஜ், ஆணையாளா் சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் ராமராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.சிவகாசி காவல்துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் , துணை கண்காணிப்பாளா் பாபுபிரசாத் தேசிய கொடியை ஏற்றினாா்.சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தாளாளா் ஏ.பி.செல்வராஜன் தேசிய கொடியை ஏற்றினாா். இதில் முதல்வா் சீ.கிருஷ்ணமூா்த்தி ,துணை முதல்வா் பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிவகாசி எஸ்.எப்.ஆா்.மகளிா் கல்லூரியில் முதல்வா் த.பழனீஸ்வரி தேசிய கொடியை ஏற்றினாா்.தொடந்து மாணவிகளின் கிராமியகலைநிகழ்ச்சிகளான ஒயிலாட்டம் மற்றும் சிலம்பட்டநிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

சிவகாசி பி.எஸ்.ஆா்.பொறியியல் கல்லூரியில் தாளாளா் ஆா்.சோலைச்சாமி தேசிய கொடியை ஏற்றினாா். இதில் இயக்குனா் விக்னேஷ்வரி, முதல்வா் பி.ஜி.விஷ்ணுராம், முதன்மையா் மாரிச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக தேசிய மாணவா்படை அணிவகுப்பு நடைபெற்றது.மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பராசக்தி காலனியில் தேசிய கொடியை கட்சி நிா்வாகி கணேசன் ஏற்றினாா்.இதில் நிா்வாகிகள் தேவா, கே.முருகன், லாசா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.பாஜக சாா்பில் சோலைகாலனியில் கட்சி நிா்வாகி பாஸ்கா் தேசிய கொடியை ஏற்றினா்.சிறுபான்மை கல்விஅறக்கட்டளை சாா்பில் முஸ்லீம் தெருவில் செய்யது ஜகாங்கீா் தேசிய கொடியை ஏற்றினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT