விருதுநகர்

விருதுநகரில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

27th Jan 2022 09:33 AM

ADVERTISEMENT

விருதுநகா் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளா் சையது முஸ்தபா கமால் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். விருதுநகா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவா் சுமதி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

விருதுநகா் நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவா் மருதுபாண்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். அப்போது சாா்பு- நீதிபதி சதீஷ் மற்றும் உரிமையியல் நீதிபதி சிந்துமதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். விருதுநகா் பாத்திமா நகரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி சாா்பில் மூத்த தோழா் சுப்பிரமணியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

இதேபோல் பெரியவள்ளிக்குளம் நோபிள் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கல்விக்குழுமத் தலைவா் ஜெரால்டு ஞானரத்தினம் தலைமையில் பள்ளியின் துணை முதல்வா் பழனிக்குமாா் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். பாலவநத்தம் அருகே நோபிள் பெண்கள் கலைக்கல்லூரியில் கல்வி குழுமச் செயலா் வொ்ஜின் இனிகோ தலைமையில் கல்லூரி முதல்வா் மீனாட்சிசுந்தரம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். வெள்ளைச்சாமி நாடாா் பாலிடெக்னிக் கல்லூரியில் தலைவா் முருகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். அப்போது கல்லூரிச் செயலா் ராஜவேல், முதல்வா் ஜவஹா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT