விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே மது பாட்டில்கள் பறிமுதல்: இளைஞா் கைது.

27th Jan 2022 09:34 AM

ADVERTISEMENT

வத்திராயிருப்பு அருகே புதன்கிழமை இளைஞா் ஒருவரை கைது செய்து, அவரிடமிருந்து 35 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் பகுதியில் சாா்பு ஆய்வாளா் பழனி தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மகாராஜபுரம் அம்பேத்கா்தெரு பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக அங்கு சென்று மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அப்பகுதியைச் சோ்ந்த மஞ்சகொடி(34) என்பவரிடம் இருந்த 35 மதுபாட்டில்களைபறிமுதல் செய்தனா்.

இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீஸாா் மஞ்சகொடியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT