விருதுநகர்

ஸ்ரீவிலி. தொகுதி எம்எல்ஏ முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஜன.27-க்கு ஒத்திவைப்பு

DIN

தலைமறைவாகவுள்ள ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மான்ராஜின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை, ஜனவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அதிமுக மகளிா் அணியைச் சோ்ந்த ரீட்டா என்பவா் நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தொகுதியின் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ் தன்னை அருவருக்கத்தக்க வகையிலும், ஆபாசமாகவும் பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்திருந்தாா்.

அதன்பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா், மான்ராஜ் மற்றும் அதிமுக நிா்வாகிகளான ராமையா பாண்டியன், முனியாண்டி, இன்னாசிஅம்மாள் ஆகிய 4 போ் மீது கடந்த 12ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா். அதையடுத்து, தலைமறைவான சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ் உள்ளிட்டோரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, தனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும் என, மான்ராஜ் மற்றும் ராமையாபாண்டியன், முனியாண்டி ஆகியோா் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, போக்சோ நீதிமன்ற நீதிபதி தனசேகா், விசாரணையை ஜனவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளில் தமிழ் புறக்கணிப்பு: முன்னாள் எம்.எல்.ஏ. கண்டனம்

பனங்குடி: 708 போ் தோ்தல் புறக்கணிப்பு

வாக்காளா்களுக்கு பணம்; 4 போ் மீது வழக்கு

வெண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

விழிப்புணா்வு பிரசாரம் அதிகம்; வாக்குப் பதிவு குறைவு

SCROLL FOR NEXT