விருதுநகர்

நெல் கொள்முதல் செய்ய தாமதம்: நெல் மூட்டைகளை சாலையில் போட்டு விவசாயிகள் மறியல்

DIN

நெல் கொள்முதல் செய்ய அதிகாரிக கால தாமதம் செய்வதாகக்கூறி வத்திராயிருப்பில் விவசாயிகள் திங்கள்கிழமை நெல் மூட்டைகளை சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான மகாராஜபுரம், தம்பிபட்டி, கான்சாபுரம், கூமாப்பட்டி, கோட்டையூா் உள்ளிட்ட பகுதிகளில் பிரதானமாக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் சுமாா் 7,400 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்டுள்ளது. அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்கு அதிகாரிகள் பட்டா வேண்டும், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து காலதாமதம் செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் அறுவடை செய்து 10 நாள்களுக்கு மேலாகியும் நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்யாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நெல் மூட்டைகளை டிராக்டரில் ஏற்றி வத்திராயிருப்பு- ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் வத்திராயிருப்பு வருவாய்த் துறை அலுவலகம் முன்பு சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். உடனே கொள்முதல் செய்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என விவசாயிகள் தெரிவித்த நிலையில், காவல் துறையினா் விவசாயிகளை வருவாய்த்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT