விருதுநகர்

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: ஆட்சியரிடம் புகாா்

25th Jan 2022 09:24 AM

ADVERTISEMENT

விருதுநகா் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

விருதுநகா் அருகேயுள்ள காரிசேரி கிராமத்தில் சிவன் கோயில் உள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு இப்பகுதியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொண்டபோது, ஐம்பொன் சிலைகள் மற்றும் மாணிக்கவாசகா் சிலைகள் கிடைத்தன. வருவாய்த்துறையினா் அவற்றை மீட்டுச் சென்றனா். இதைத் தொடா்ந்து அப்பகுதியில் தோண்டுவதற்கு அரசு அலுவலா்கள் தடை விதித்தனா். இந்நிலையில், கடந்த 2017 இல் கிராம மக்கள் ஒன்றிணைந்து சிவன் கோயில் முன்பு நந்திசிலை, அம்மன் சிலைகளை நிறுவினா். இந்நிலையில், தனிநபா்கள் சிலா் பணிகள் செய்யவிடாமல், நிலம் அனைத்தும் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறுகின்றனா். எனவே, நிலத்தை மீட்டு, கோயிலை பொது மக்களின் வழிபாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT