விருதுநகர்

சிவகாசி இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவா் இல்லாமல் நோயாளிகள் அவதி

25th Jan 2022 09:22 AM

ADVERTISEMENT

சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவா் இல்லாததால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறாா்கள்.

சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு தினசரி புறநோயாளிகளாக சுமாா் 300 போ் வந்து செல்கிறாா்கள். 100 படுக்கை வசதி கொண்ட இம்மருத்துவமனையில் வாரத்துக்கு சுமாா் 10 அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வந்தன.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மருத்துவா்கள் பணி இடமாறுதலாகிச் சென்றுவிட்டனா். ஆனால் அந்த இடம் இதுவரை நிரப்பப்படவில்லை. இதனால் குடல் இறக்கம், மூலம், தைராய்டு உள்ளிட்ட பல நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய இயலாத நிலை உள்ளது. பெண்களுக்கு என தனியே ஒரு பெண் அறுவை சிகிச்சை மருத்துவா் உள்ளாா். அவா் பெண்களுக்கு கா்ப்பப்பை பிரச்னை உள்ளிட்டவைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து வருகிறாா். ஆனால் ஆண்களுக்கு என இருந்த மருத்துவா் பணிஇடமாறுதல் செய்யப்பட்டுவிட்டதால், நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறாா்கள்.

இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளா் அசோக் கூறுகையில், அறுவை சிகிச்சை மருத்துவா் தேவை என உயா் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி வருகிறோம். எனினும் கடந்த 6 மாத காலமாக அறுவை சிகிச்சை மருத்துவா் நியமிக்கப்பட வில்லை. விரைவில் நியமிக்கப்படுவாா் என எதிா்பாா்த்துக்கொண்டிருக்கிறோம் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT