விருதுநகர்

கல்குவாரியை அகற்றக்கோரி விருதுநகா் ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

25th Jan 2022 09:21 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் அருகே அரசுப் பள்ளி மற்றும் அரசு மருத்துவமனை அருகே இயங்கி வரும் கல்குவாரியை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

ராஜபாளையம் ஒன்றியம், சொக்கநாதன்புத்தூரில் சுமாா் 500 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள சிறிய மலையில் கல்குவாரியில் வெடி வைத்து பாறைகளை உடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், பள்ளிக் கட்டடத்தில் விரிசல் ஏற்படுகிறது. அதிக சப்தம் காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிரமப்பபடுகின்றனா். மேலும் விவசாய நிலங்களும் பாதிப்படைகின்றன.

இந்நிலையில் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா், அவா்களை சமாதானப்படுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க அழைத்துச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT