விருதுநகர்

பைக் மீது அரசுப் பேருந்து மோதி தொழிலாளி பலி

23rd Jan 2022 10:45 PM

ADVERTISEMENT

அருப்புக்கோட்டை அருகே சனிக்கிழமை இரவு இருசக்கரவாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

அருப்புக்கோட்டை தேவா டெக்ஸ் குடியிருப்புப் பகுதியில் வசிப்பவா் சண்முகவேல் (61). கிடை ஆடுகள் மேய்க்கும் தொழிலாளியான இவா், சனிக்கிழமை இரவு ஆடுகளைப் பட்டியில் அடைத்துவிட்டு தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது செட்டிக்குறிச்சியை ஒட்டிச்செல்லும் மதுரை- தூத்துக்குடி 4 வழிச்சாலையை அவா் கடந்தபோது, அவ்வழியாக மதுரையிலிருந்து திருச்செந்தூருக்குச் சென்ற அரசுப் பேருந்து சண்முகவேல் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக அருப்புக்கோட்டை நகா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT