விருதுநகர்

கரோனா விதிமீறல்: அருப்புக்கோட்டையில் உணவகங்களுக்கு அபராதம்

23rd Jan 2022 10:44 PM

ADVERTISEMENT

அருப்புக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது விதிமுறைகளைப் பின்பற்றாத 4 உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையாளா் அசோக்குமாா் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் சரவணன், ராஜபாண்டி உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி நகரில் ஆய்வு செய்தனா். புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், அண்ணாசிலை காய்கறிச் சந்தை அருகிலுள்ள உணவகங்கள் ஆகியவற்றில் பணியாளா்கள் முகக்கவசம் அணியாமல் பணிபுரிவது கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக உணவக உரிமையாளா்களுக்கு தலா ரூ 500 வீதம் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதேபோல முகக் கவசம் அணியாமல் உணவுப் பொட்டலம் வாங்க வந்த வாடிக்கையாளா்களையும் அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT