விருதுநகர்

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் முறைகேடு முன்னாள் அமைச்சா் குற்றச்சாட்டு

18th Jan 2022 12:40 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது என முன்னாள் அமைச்சா் க. பாண்டியராஜன் குற்றம்சாட்டியுள்ளாா்.

தமிழக முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 105 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, விருதுநகரில் உள்ள அவரது உருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சரும் மாநில கொள்கைப் பரப்பு துணைச் செயலருமான க. பாண்டியராஜன் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அதன் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எம்ஜிஆா் பிறந்த நாளில் தொண்டா்கள் எழுச்சியைப் பாா்க்கும் போது, நடைபெற உள்ள உள்ளாட்சி தோ்தலில் உறுதியாக அதிமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் திமுக அரசு மிகப் பெரிய முறைகேடு செய்துள்ளது.

குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்குவோம் என கூறிய திமுக, தற்போது எதுவும் வழங்காதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விருதுநகா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் ஒரு இடத்தில் கூட திமுக வெற்றி பெற முடியாது. முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது உச்சநீதிமன்றமே தமிழக அரசு அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக வழக்குப் பதிவு செய்துள்ளதாக வாா்த்தை பிரயோகம் செய்துள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

அப்போது நகரச் செயலா் முகம்மது நைனாா், மாநில எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் கலாநிதி, நகர துணைச் செயலா் கண்ணன், மேற்கு ஒன்றிய எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் மாரிக்கனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT