விருதுநகர்

ராஜபாளையத்தில் கஞ்சா விற்றவா் கைது

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் கஞ்சா விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் மங்காபுரத்தை சோ்ந்த முனியாண்டி (40) என்பவரிடம் சுந்தரராஜபுரத்தை சோ்ந்த அய்யனாா் என்பவா் கஞ்சா விற்பனை செய்துள்ளாா்.

அப்போது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தெற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரித்த போது முனியாண்டி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. போலீஸாா் அவரிடம் இருந்த 1 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, முனியாண்டியை கைது செய்தனா். மேலும் அய்யனாா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT