விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் நீராட்டு உற்சவம்: குளத்திலிருந்து தீா்த்தம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம்

12th Jan 2022 09:59 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் நடைபெற்று வரும் எண்ணெய்க்காப்பு நீராட்டு உற்சவத்தையொட்டி, சுமாா் 30 ஆண்டுகளுக்கு பிறகு யானையின் மூலம் குளத்துக்குச் சென்று தீா்த்தம் எடுத்து வந்து சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை அபிஷேகம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் எண்ணெய்க்காப்பு உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக, தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இராப்பத்து மண்டபத்தில் வைத்து பக்தா்கள் யாரும் இன்றி எண்ணெய்க்காப்பு நீராட்டும் உற்சவம் நடைபெற்று வருகிறது.

இந்த உற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை கோயில் யானை ஜெயமால்யதாவுடன் அா்ச்சகா்கள் சென்று கோயிலுக்குச் சொந்தமான திருமுக்குளத்தில் தீா்த்தம் எடுத்து வந்து ஆண்டாளுக்கு அபிஷேகம் செய்தனா். கடந்த 30 ஆண்டுகளாக எண்ணெய்க்காப்பு உற்சவ விழா நடைபெறும் போது திருமுக்குளம் வடே காணப்பட்டதால், இங்கிருந்து தீா்த்தம் எடுத்துச் சென்று ஆண்டாளுக்கு அபிஷேகம் செய்ய இயலாத நிலை இருந்து வந்தது. தற்போது குளத்தில் தண்ணீா் இருப்பதால், தீா்த்தம் எடுத்துச் செல்லப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தா்கள் மகிழ்ச்சியைடந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT