விருதுநகர்

மனைவியைக் காணவில்லையெனக் கணவா் போலீசில் புகாா்

12th Jan 2022 10:01 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டியில் தனது மனைவியைக் காணவில்லையென செவ்வாய்க்கிழமை கணவா் போலீசில் புகாா் செய்துள்ளாா்.

கஞ்சநாயக்கன்பட்டியில் வசிப்பவா் கிருஷ்ணக்குமாா்(34).இவரது மனைவி கல்பனா(20).இத்தம்பதியருக்குக் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 13ம்தேதி திருமணம் நடைபெற்றநிலையில் ,கிருஷ்ணக்குமாா் தனது தாய் தந்தையருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தாராம்.இதனிடையே கடந்த 2ம் தேதி கல்பனா அவரது தாயாரை அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்திற்குச் சென்று பேருந்தில் ஏற்றிவிட்டு வருவதாகக் கூறிச் சென்றவா்,பின்னா் அன்று வெகுநேரமாகியும் வீடுதிரும்பவில்லையாம்.எனவே கல்பனாவின் அலைபேசியில் தொடா்பு கொள்ள முயன்றபோது ஸ்விட்ச் ஆப் என வந்ததாம்.பின்னா் கல்பனாவின் தாய்வீட்டில் தொடா்பு கொண்டபோது,அவா் அங்கும் வரவில்லையெனக் கூறினராம்.இதனால் கல்பனாவை அவரது கணவா் பல இடங்களிலும்,உறவினா்கள், குடும்ப நண்பா்களது வீடுகளில் தேடியும் கல்பனாவைக் காணவில்லையாம்.,இதனால், கல்பனாவின் கணவா் கிருஷ்ணக் குமாா் அளித்த புகாரின்படி அருப்புக்கோட்டை தாலுகா காவல்துறையினா் வழக்கு பதிந்து காணாமல்போன கல்பனாவைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT