விருதுநகர்

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி: அமைச்சா் ஆய்வு

12th Jan 2022 10:01 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு முறையாக வழங்கப்படுகின்றனவா என தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அருப்புக்கோட்டை காந்தி பொட்டல் , ராமலிங்கா நகா் நெசவாளா் குடியிருப்பு, பாளையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் நியாயவிலைக் கடைகளில் அமைச்சா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது முன்னாள் நகா் மன்றத் தலைவா் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் சுப்பாராஜ், திமுக ஒன்றிச் செயலாளா் பொன்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT