விருதுநகர்

சிவகாசி அருகே இளம் பெண் விஷம் அருந்தி தற்கொலை

12th Jan 2022 10:03 AM

ADVERTISEMENT

சிவகாசி அருகே இளம் பெண் ஒருவா் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். சிவகாசி அருகே தாழிகுளத்துப்பட்டியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி முருகன்.இவரது மனைவி பொன்மணி(23). இவா்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் ஜனவரி 7 ஆம் தேதி பொன்ம ணி விஷம் அருந்தினாராம்.

இதையடுத்து விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பயனின்றி செவ்வாய்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து அவரது தாய் முத்துமாரி அளித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்

ADVERTISEMENT
ADVERTISEMENT