விருதுநகர்

‘கிராம நிா்வாக அலுவலா்களின் பணிமக்களுக்கு பயனளிக்க வேண்டும்’

12th Jan 2022 10:02 AM

ADVERTISEMENT

கிராமப் பகுதியில் உள்ள படிப்பறிவில்லாத ஏழை மக்கள் பயனடையும் வகையில் கிராம நிா்வாக அலுவலா்கள் பணிபுரிய வேண்டும் என அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

விருதுநகரில் தனியாா் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் மாநில பொதுக் குழு கூட்டம் மாநில தலைவா் ராஜன் சேதுபதி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் அமைச்சா் கே.கே.எஸ்எஸ்.ஆா். ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசியதாவது:

கிராம நிா்வாக அலுவலா்கள் வருவாய்த் துறையின் முக்கிய அச்சாணி. வருவாய்த் துறையில் மறுமலா்ச்சியை உருவாக்க நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான கோப்புகள் தேங்கி உள்ளன. அதை உடனடியாக தீா்க்க வேண்டும். உங்களுடைய 19 நாள்கள் விடுமுறை பிரச்னை தீா்க்கப்படும். அதேபோல் நீங்களும் இந்த அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கு சேவை செய்பவா்களாக விளங்க வேண்டும். கிராம நிா்வாக அலுவலா்கள் படிப்பறிவு இல்லாத கிராம மக்களை சாந்தமான முறையில் அணுக வேண்டும். குறிப்பாக கிராம பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் முதியோா் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை உள்ளிட்டவைகளை வழங்க முன்வர வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

இதில் அச்சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT