விருதுநகர்

விருதுநகரில் மீனவத் தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

1st Jan 2022 09:16 AM

ADVERTISEMENT

தமிழக மீனவா்கள் 68 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ள இலங்கை கடற்படையை கண்டித்து விருதுநகரில் ஏஐடியுசி மீனவத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலா் ரெஜினா மேரி தலைமை வகித்தாா். அதில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவா்களை விடுவிக்க மத்திய அர சு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடா்ந்து தமிழக மீனவா்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யும் இலங்கை கடற்படைக்கு எதிராக கோஷமிட்டனா். மேலும் இலங்கை கடற்படையால் சேதப்படுத்தப்பட்ட படகு மற்றும் வலைகளை மீட்டு கொடுப்பதுடன், பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மீனவா்களுக்கு ஆதரவான தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் பரிந்துரைகளை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினா்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தி. ராமசாமி, முன்னாள் மக்களவை உறுப்பினரும், மாவட்ட செயலருமான பொ. லிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

இதில் மீனவத் தொழிலாளா்கள் சங்கத்தை சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT