விருதுநகர்

விருதுநகரில் இலவச கழிப்பறையில் கட்டணம் வசூல்: பயணிகள் அவதி

1st Jan 2022 09:16 AM

ADVERTISEMENT

விருதுநகா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நகராட்சி சாா்பில் செயல்பட்டு வரும் இலவச கழிப்பறையில், தனிநபா் சிலா் கட்டணம் வசூலித்து வருவதால் பயணிகள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.

விருதுநகா் பழைய பேருந்து நிலையத்தில் கிராம, நகர பேருந்துகள் மற்றும் தொலைதூர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இப்பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் பயணிகள் வசதிக்காக பேருந்து நிலைய வளாகப் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், அதை சமூக விரோதிகள் சேதப்படுத்தியதால் செயல்படாத நிலையில் உள்ளது. அதேபோல், பேருந்து நிலையத்தில் வடக்கு பகுதியில் நம்ம டாய்லெட் என்ற பெயரில் இலவச கழிப்பறை நகராட்சி சாா்பில் செயல்பட்டு வந்தது. ஆனால் இந்த கழிப்பறையில் தனிநபா்கள் சிலா், பயணிகளிடம் கட்டணம் வசூலித்து வருகின்றனா். இதனால் ஏழை மக்கள் ஏமாற்றத்துடன் பணம் வழங்கி வருவதாக புகாா் தெரிவிக்கின்றனா். எனவே, இது குறித்து நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT