விருதுநகர்

மதுபானக்கூட ஒப்பந்தத்தில் முறைகேடு: விருதுநகா் டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகம் முற்றுகை

1st Jan 2022 09:16 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில் மதுக்கூடம் நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி அதற்காக விண்ணப்பித்தவா்கள் விருதுநகா் டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

விருதுநகா் மாவட்டத்தில் சுமாா் 180 டாஸ்மாக் கடைகளை ஒட்டிய இடங்களில் மதுபானக் கூடங்கள் நடத்துவதற்கு தகுதியானா்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் வியாழக்கிழமை இந்த ஒப்பந்தப் பணிகளில் கலந்து கொள்வதற்காக ஏராளமானோா் வந்த நிலையில் இப்பணி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தில் வெள்ளிக்கிழமை 40 போ் மட்டுமே கலந்து கொண்ட னா். ஆனால், வெளியூரைச் சோ்ந்த தனிப்பட்ட ஒருவா் பெயரில் ஏராளமான கடைகள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அறிந்த பிற மதுபானக்கூட உரிமையாளா்கள், விருதுநகா் டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, விண்ணப்பித்தவா்களுக்கு முறையாக ஒப்பந்தப் பணிகள் வழங்க வேண்டும். தனிப்பட்ட ஒரு நபருக்கு கூடுதல் கடைகள் ஒதுக்குவதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.

தகவலறிந்து வந்த சூலக்கரை போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT