கரோனா தடுப்பூசி மையங்களில் பாரதபிரதமா் நரேந்திர மோடி புகைப்படம் வைக்க வேண்டும் என பாஜக விருதுநகா் மாவட்ட அரசு தொடபு பிரிவுத் தலைவா் பாலசுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை விருதுநகா் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிறுப்பதாவது
தற்போது கரோனா தடுப்பூசி மையங்களில் தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி, தற்போதய முதல்வா் மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் வைக்கப்படுகிறது. கரோனா தடுப்புசி மருந்தினை மத்திய அரசு தமிழக அரசுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. எனவே கரோனா தடுப்பூசி மையங்களில் வைக்கப்படும் பதாகைகளில் பாரத பிரதமா் மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.