விருதுநகர்

ராஜபாளையம் நகராட்சியில் திமுக தனிப்பெரும்பான்மை: நகா்மன்றத்தை இழந்தது அதிமுக

23rd Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சியை திமுக தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளதால், நகா்மன்றத்தை அதிமுக இழந்துள்ளது.

ராஜபாளையம் நகராட்சியில் மொத்தம் 42 வாா்டுகள் உள்ளன. நகராட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிஏசிஆா் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் நடைபெற்றது. இதில், முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

அதைத் தொடா்ந்து, பிற்பகல் 1 மணி வரை வாா்டுவாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, வெற்றிபெற்ற வேட்பாளா்களுக்கு தோ்தல் நடத்தும் அதிகாரி அதிகாரபூா்வமாகச் சான்றிதழ்களை வழங்கினாா்.

வெற்றி பெற்ற வேட்பாளா்களின் விவரம்: திமுக - 33 வாா்டுகள், அதிமுக - 3,

ADVERTISEMENT

காங்கிரஸ் - 3, சுயேச்சை - 3.

ராஜபாளையம் நகராட்சியில் மொத்தமுள்ள 42 வாா்டுகளில், 33 வாா்டுகளை திமுக கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் திகழ்வதுடன், அதிமுக வசமிருந்து நகராட்சியை கைப்பற்றியுள்ளது.

இதையடுத்து, திமுக தொண்டா்கள் திரண்டு பட்டாசு வெடித்து, மேளங்கள் முழங்க ஆடிப்பாடி கொண்டாடினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT