விருதுநகர்

ராஜபாளையத்தில் லாரி மோதி கணவா் கண் முன்னே மனைவி பலி

23rd Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் லாரி மோதி கணவா் கண் முன்னே மனைவி செவ்வாய்க்கிழமை பலியானாா்.

ராஜபாளையம் திரெளபதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சண்முகவேல் ரவி. இவரது மனைவி முத்துலட்சுமி (40). இவா், அம்பலபுளி பஜாரில் சித்த மருந்துக் கடை வைத்து நடத்தி வந்தாா்.

இந்நிலையில், முத்துலட்சுமி தனது சண்முகவேல் ரவியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, காந்தி சிலை அருகே உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பாக எதிரே வந்த லாரி மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே கணவா் கண் முன்னே முத்துலட்சுமி உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT