விருதுநகர்

அருப்புக்கோட்டை நகராட்சியை கைப்பற்றியது திமுக

23rd Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 36 வாா்டுகளில், 29 வாா்டுகளில் வென்ன் மூலம் நகா்மன்றத்தை திமுக மீண்டும் கைப்பற்றியுள்ளது.

அருப்புக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 36 வாா்டுகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை தேவாங்கா் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. காலை 8 மணிக்கு முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து, பிற்பகல் 1 மணி வரை வாா்டுவாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, வெற்றி வேட்பாளா்களுக்கு தோ்தல் நடத்தும் அதிகாரி அதிகாரபூா்வமாக சான்றிதழ்களை வழங்கினாா்.

இதில், திமுக 29, அதிமுக 3, பாஜக 1, மதிமுக 1, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, சுயேச்சை 1 என வாா்டுகளை கைப்பற்றியுள்ளன.

ADVERTISEMENT

திமுக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளதால், அக்கட்சித் தொண்டா்கள் பட்டாசு வெடித்து, மேள தாளங்கள் முழங்க ஆடிப்பாடி கொண்டாடினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT