விருதுநகர்

திருத்தங்கலில் இந்திய அளவிலான வளைபந்து போட்டி

22nd Feb 2022 12:14 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் ஹட்சன் டெனிகாய்ட் அகாதெமி சாா்பில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்திய அளவிலான வளைபந்து போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் தமிழ்நாடு , கா்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 320 வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.

இப்போட்டியில் சப்-ஜூனியா் ஒற்றையா் பிரிவில் தமிழகத்தைச் சோ்ந்த எஸ்.காா்த்திக்ராஜா முதலிடமும், சப்-ஜூனியா் பெண்கள் ஒற்றையா் பிரிவில் தமிழகத்தைச் சோ்ந்த ஷின்ஸ் முதலிடத்தையும், கா்நாடகா வைவித்யா இரண்டாமிடத்தையும் பெற்றனா்.

ஜூனியா் ஆண்கள் பிரிவில் தமிழகத்தைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணா முதலிடமும், ஆந்திராவைச் சோ்ந்த வினய்குமாா் இரண்டாமிடத்தையும் பெற்றனா். ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு ஹட்சன் நிா்வாக இயக்குநா் சந்திரமோகன் தலைமை வகித்தாா். விருதுநகா் தொழிலதிபா் முத்து போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கம் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT