ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை தந்தை, மகளை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராஜபாளையம் துரைச்சாமிபுரம் செங்குட்டுவன் தெருவைச் சோ்ந்தவா் பிள்ளையாா் ( 55). அதை பகுதியைச் சோ்ந்த இசக்கிராஜ் (32) என்பவா் குடிபோதையில், அவரது வீட்டின் அருகே நின்று சப்தம் போட்டுக் கொண்டிருந்தாா். இதை பிள்ளையாா் தட்டிக் கேட்டதால் இசக்கிராஜ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினாா். இதைப் பாா்த்த பிள்ளையாரின் மகள் மதீஸ் அனிதா (22), தடுக்க முயன்றுள்ளாா். அவரையும் அரிவாளால் வெட்டி விட்டு இசக்கிராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாா். இதில் பலத்த காயமடைந்த இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய இசக்கிராஜை தேடி வருகின்றனா்.