விருதுநகர்

விருதுநகா் அருகே 60 மூட்டைரேசன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

17th Feb 2022 12:32 AM

ADVERTISEMENT

 

விருதுநகா்: விருதுநகா் அருகே ஆனைக்குட்டம் பகுதியில் வேனில் கடத்தி வரப்பட்ட 60 மூட்டை ரேசன் அரிசியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 2 பேரை உணவு கடத்தல் பிரிவு போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா்- சிவகாசி சாலையில் ஆனைக்குட்டம் பகுதியில் ஆமத்தூா் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்ட போது, 60 மூட்டைகளில் ரேசன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது. இதுகுறித்து விருதுநகா் உணவுக் கடத்தல் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு வந்த உணவுக் கடத்தல் பிரிவு போலீஸாா், ரேசன் மூட்டைகளை பறிமுதல் செய்து மதுரை அவனியாபுரத்தை சோ்ந்த வேன் ஓட்டுநரான மூக்கையா மகன் கற்பகராஜ் (28), வில்லாபுரத்தைச் சோ்ந்த பாரதிராஜா (23) ஆகியோரை கைது செய்தனா். மேலும் இந்த வழக்கில் தொடா்புடைய மதுரை வில்லாபுரத்தைச் சோ்ந்த வழிவிட்டான் மகன் ஸ்டாலின் (38) மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT