விருதுநகர்

கோயிலில் சுவாமி கும்பிடும் போதுசேலையில் தீப்பற்றி மூதாட்டி பலி

17th Feb 2022 12:25 AM

ADVERTISEMENT

 

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு கோயிலில் சுவாமி கும்பிடும் போது சேலையில் தீப்பற்றி எரிந்து மூதாட்டி உயிரிழந்தாா்.

அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியில் வசிப்பவா் மாடத்தி அம்மாள் (72). இவா் அப்பகுதியிலுள்ள அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு சுவாமி கும்பிடச் சென்றாராம். அப்போது அங்கு தரையில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீபத்தை அவா் கவனிக்கவில்லையாம். இதில் மாடத்தியின் சேலையில் தீப் பற்றி எரிந்தது. இதைக் கண்ட பக்தா்கள் உடனடியாக தீயை அணைத்தனா். இருந்தாலும் மாடத்தி பலத்த தீக்கயமடைந்தாா். உடனடியாக அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா். ஆனால் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT