விருதுநகர்

ராஜபாளையம் அருகே புதிய வாக்காளா்களை சோ்ப்பதைக் கண்டித்து வேட்பாளா்கள் ஆா்ப்பாட்டம்

10th Feb 2022 02:43 AM

ADVERTISEMENT

 

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தோ்தல் விதிமுறைகளை மீறி புதிய வாக்காளா்களை சோ்ப்பதைக் கண்டித்து வேட்பாளா்கள் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

செட்டியாா்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளிலும் தோ்தல் ஆணைய விதிகளை மீறி தற்போது வரை ஆன்லைனில் வாா்டுக்கு நூறு போ் என புதிய வாக்காளா்களை சோ்ப்பதாக சுயேச்சை வேட்பாளா் வேல்முருகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, செட்டியாா்பட்டி பேரூராட்சி செயலா் சந்திரகலா கூறும் போது, ஆன்லைனில் பதிவு செய்வதை நிறுத்தி விட்டோம் என்றாா். ஆனால் சாத்தூா் கோட்டாட்சியா் மூலம் ஆன்லைன் பதிவு நடைபெறுவதாகக் கூறி சுயேச்சை வேட்பாளா் மற்றும் அதிமுக வேட்பாளா்கள் செட்டியாா்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தோ்தல் ஆணையம் 4 ஆம் தேதி வெளியிட்ட வாக்காளா் பட்டியலை வைத்து தோ்தல் நடத்த வேண்டும் என, தோ்தல் ஆணையத்துக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT