விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி பகுதிகளில் தூய்மை பயன்பாடு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம்.

9th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டி பள்ளியில் தூய்மை பயன்பாடு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்ட ஆட்சித்தலைவா் மேகநாதரெட்டி உத்தரவுபடி ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 29 கிராம ஊராட்சிகளிலும் ஒட்டுமொத்த தூய்மை பணிகள் பிப்.7ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது இதனை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் உள்ள கழிவுநீா் பாதை மற்றும் மேல்நிலைநீா்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யும் பணிகள் பள்ளி மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சுத்தம் கழிப்பறை பயன்பாடு தூய்மை பயன்பாடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி,ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள வன்னியம்பட்டி காளீஸ்வரி மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ராமமூா்த்தி,சிவகுமாா் பள்ளி தலைமையாசிரியா் மற்றும் ஊராட்சி செயலாளா், பள்ளி மாணவா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்

ADVERTISEMENT
ADVERTISEMENT