விருதுநகர்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: 2 தொழிலாளா்கள் காயம்

9th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகாசி அருகே ஈஞ்சாரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே ஈஞ்சாரில் செந்தில்குமாரி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூா் சான்றிதழ் பெற்ற இந்த ஆலையில் பேன்சிரகப் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை வெல்டிங் பணி நடைபெற்றது. அப்போது அதிலிருந்து வெளியேறிய தீப்பொறி அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த பட்டாசுத் தொழிலாளா்களான சிவகாசியை சோ்ந்த செல்வி (40), ராஜபாளையத்தை சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் மாரீஸ்வரன் (29) ஆகியோா் காயமடைந்தனா். இதில் நூறு

சதவீத காயமடைந்த மாரீஸ்வரன் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். காயமடைந்த செல்வி சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

ADVERTISEMENT

தகவல்அறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT